Case against Mars Colonisation | செவ்வாய் குடியேற்ற பிரச்சினை

இந்த மாத ஆரம்பத்தில் அதாவது முதலாம் ஆகஸ்டு 2018 அன்று. எலன் மஸ்க் இன் ஸ்பேஸ் எக்ஸ் சார்பில் ஒரு கூட்டம் போடப்பட்டது. இதனை மார்ஸ் ஒர்க் ஷாப் ஆரம்ப விழா என்று அழைக்கின்றனர்.இதில் அமெரிக்காவை சேர்ந்து முன்னணி அறிவியல் அறிஞர்கள் மற்றும் முக்கியமான அழைப்பாளராக. நாசா வின் மார்ஸ் exploration குழுவினர் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் பேசிய ஒரு தலைப்பு. விவாதம் செய்த அந்த தலைப்பு என்னவென்றால். “செவ்வாயில் மனித குடியேற” என்பது பற்றிதான்.

இதில் மிகுந்த ஆர்வம் காட்டும் எலன் மஸ்க். இன் ஸ்பேஸ் ஏக்ஸ். நிறுவனமானது. இன்னும் 40-100 வருடத்திற்குள் மனிதர்களாகிய நாம், செவ்வாயில் தரையிறங்கி. அதில் மக்கள் தொகை கொண்ட ஒரு காலனியை கொண்டுவரவேண்டும் என்று கூறும் நேரத்தில் , அங்குள்ள பலர் இதனை செய்ய வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

பியோ research சென்டர் என்ற ஒரு அமெரிக்கா நிறுவனம், அந்த நாட்டு குடிமக்கள் இடம் ஒரு சில சர்வே எடுத்துள்ளது அதில் சொன்ன கருத்துக்களை வைத்து அவர்கள். அதாவது அமெரிக்கா மக்கள் எதை விரும்புகிறார்களாம் என்று ஒரு தரம் பிரித்து வைத்துள்ளனர். (முக்கியமாக விண்வெளி பற்றியும் நாசாவின் செயல்கள் பற்றியும்) அந்த தரவுகளின் அடிப்படையில் மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்புவதை அமெரிக்கா மக்கள் விரும்பவில்லை . அது 8 ஆம் இடத்தில் உள்ளது. அதனால். நாம் வேறு ஏதாவது பற்றி பேசலாம் இது வீன் என்கின்றனர் ஒரு சில அறிஞர்கள், அந்த சர்வே ரிசல்ட் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இருந்து அமெரிக்கா மக்கள். பூமியை காப்பாற்றுவதில். மற்றும் பூமியில் தட்ப வெப்ப மாற்றங்களால் கண்காணியுங்கள் என்று அதிகமாக வலியுறுத்தி இருப்பதை உங்களால் கான முடியும்.

Ref: http://www.pewinternet.org/2018/06/06/majority-of-americans-believe-it-is-essential-that-the-u-s-remain-a-global-leader-in-space/ps_06-06-18_science-space-01/

ஆனால் இங்குதான் எலன் Musk அவர்களின் கருத்தை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். மேலே உள்ள படத்தில் நீங்கள் 65 சதவீத அமெரிக்கா மக்கள் பூமியை காப்பாற்ற சொல்லியிருப்பது புரியும் ஆனால். . 73%மக்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் “அமெரிக்கா தான் விண்வெளி போட்டியில் முன்னணியில் இருக்கவேண்டும் ” என்று.

“American will be pioner in space race” they said

அப்படி இருக்கையில் விண்வெளி போட்டியில் இதுவரை அமெரிக்காவின் ரஷ்யாவும் தான் இருந்து வந்தன. ஆனால் இப்போது , சைனா, ஜப்பான், மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மிகுந்த வேகத்தில் வளர்ந்து வருகின்றன. குறிப்பாக. விண்வெளி போட்டியில்.. எனவே நாம் இந்த செவ்வாய் மனிதர்கள் குடியேற்ற வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று . கூறுகிறது. ஸ்பேஸ் எக்ஸ் என் குழு.

நாசா வின் ஒரு பிரத்தியேக வரைபடம். (கர்ப்பணை)

செவ்வாய் பயணமானது ரொம்பவும் ஆபத்து நிறைந்தது, கடுப்பா இருக்கும் , உத்திரவாதம் இல்லாதது. ஆனாலும் தற்போது லேட்டஸ்டாக வந்த ஒருசில தரவுகள், செவ்வாயின் துருவ பகுதிகளில் தண்ணீர் ஆதாரம் இருக்கிறது என்றும், அதன் வளிமண்டலத்தில் மீதெனின் ஒரு வகை கலந்திருக்கிறது என்றும்.

இதெல்லாம் நம்மை அங்கு போக தூண்டினாலும். அதன் ஆபத்துகள் மிகவும் பிரம்மாண்டமானது.

மறைந்த முன்னாள் இயற்பியல் அறிஞர் “ஸ்டீஃபன் ஹாக்கிங்” கூட . சொல்லும் போது, நமது பூமி இன்னும் 100 வருடங்கள் வரைதான் தாக்கு பிடிக்கும். என்று கூறியதையும் நாம் சாதாரணமாக அப்படியே விட்டுவிட முடியாது. எனவே

நீங்க என்ன நினைக்கிறீங்க அப்டின்னு எனக்கு கமெண்டுல சொல்லுங்க . அடுத்த பதிவில் பார்ப்போம்.

முழு கட்டுரை: https://amp.theguardian.com/science/blog/2018/aug/28/the-case-against-mars-colonisation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.