யுரேனஸ் கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள் | Space News Tamil about Uranus

இன்று நாம் யுரேனஸ் கிரகம் எனும் ஒரு பனிக் கிரகத்தினை பற்றிய ஒரு சில செய்திகளை தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கண்டுபிடித்தது

இந்த கிரகமானது நமது சூரியகுடும்பத்தில் தான் உள்ளது என நாம் கண்டறிந்தது  மார்ச் மாதம் 13 ம் நாள் 1781ல் தான். கண்டுபிடித்தவரின் பெயர் வில்லியம் ஹெர்ஷெல் (William Herschel)

பொதுவான கணக்குகள்

1. சூரியனை சுற்றும் வட்டபாதையின் அளவு (Orbit Size around the Sun)
=2,870,658,186 KM (கிலோ மீட்டர்)
2. சுற்றுப்பாதையின் சராசரி திசைவேகம் (Mean Orbit Velocity)
= 24,277 km/h (மணிக்கு)
3. பூமத்திய சாய்வு (Equatorial Inclination)
= 97.8 degrees (பிற்போக்கு சுழற்சி) Retrograde rotation

சூரியனிடமிருந்து தொலைவு

இந்த கிரகமானது 2.9 பில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது அதாவது 1.8 பில்லியன் மைல் அல்லது 19.19 AU (Astronomical Units) ஒரு AU என்பது 150 மில்லியன் கி.மீ குறிக்கும்.

நாட்கள் மற்றும் நேரங்கள்

இந்த கிரகத்தில் ஒரு நாள் என்பது அதாவது ஒருமுறை தன்னைதானே சுற்றிவர புவியின் கனக்குபடி 17 மணி நேரங்களே எடுத்துக்கொள்ளும்.

ஆனால் ஒரு வருடம் அதாவது ஒரு முறை முழுமையாக சூரியனை சுற்றிவர புவியின் கணக்குப்படி 84 வருடங்களை எடுத்துக்கொள்ளும். [ஒரு வேளை நான் யுரேனஸில் பிறந்திருந்தால் எனக்கு 1/4 வயது தான் ஆகியிருக்கும்]

அதாவது 30,687 பூமியின் நாட்கள் எடுத்துக்கொள்ளும்.

கிரகத்தில் உள்ள பொருட்கள்

இந்த கிரகத்தில் அதாவது இதை ஏற்கனவே ஒரு பனிக்கிரகம் என அறிவியலாலர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் . அப்படியானால் இந்த கிரகம் முழுவது பனியால் ஆனது என அர்த்தம். கிட்டத்தட்ட அப்படித்தான் இந்த கிரகத்தில் உள்ள மேற்பரப்பில் 90% அதற்கும் அதிகமான பனிப்பொருட்கள் உள்ளன (Icy Materials ) அதன் மேற்பரப்பில் உள்ள பொருட்களாவன.
  1. H2O (Water)தண்ணீர் மூலக்கூறு
  2. CH3 (Methane) மீத்தேன்
  3. NH4 (Ammonia) அம்மோனியா
இவைதான் அந்த கிரகத்தில் மேற்பரப்புகளைல் அதிகமாக காணப்படுகிறது

வளிமண்டலத்தில் உள்ள பொருட்கள்

நமது சூரியகுடும்பத்தில் உள்ள பெரும்பாலானா கிரகங்களின் வளிமண்டல மூலக்கூறுகள் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் . அதே போல் இந்த கிரகத்திலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் மூலக்கூறுகள் காணப்படுகின்றன மேலும் மீத்தேன் மூலக்கூறு கானப்படுகிறது

வளையங்கள்

யுரேனஸ் கிரகமானது 13 வளையங்களை கொண்டுள்ளது. இவைகள் கிரகத்தில் அருகில் இருந்தே ஆரம்பிக்கின்றன. அதாவது கிரகத்தின் அருகில் இருக்கும் வளையங்கள் மிகவும் மெல்லியதாகவும் கருமையான அடர்ந்த வண்னமுடையவை ஆகையால் இவை சரியாக கண்ணுக்கு புலப்படுவதில்லை ஆனால் வெளிப்புறம் உள்ள வளையங்கள்

வண்ணமயமான நிறத்திலும் பளிச்சென தெரியம் படியும் உள்ளது. ஆகையால் பார்ப்பதற்கு. கிரகத்தினை விட்டு சற்று தொலைவில் வளையங்கள் இருப்பது போல் தோன்றும் ஆனால் அப்படியல்ல. 

துணைக்கிரகங்கள்

இந்த கிரகத்திற்கு 27 துணைகோள்கள் உள்ளன இவை அணைத்தும் பெயரிடப்பட்டும் உள்ளன இந்த அனைத்து துனைக்கிரகங்களும் வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்ஸாண்டர் போப் இவர்களின் கதைகளில் உள்ள காதாபாத்திரங்களின் பெயர்களை கொண்டுள்ளன. வில்லியம் ஷேக்ஸ்பியர் பற்றி உங்களுக்கே தெரியும் ஆங்கில கவிதைகள் மற்றும் கதைகள் இயற்றுபவர். இவரின் கதை மாந்தர்கள் பெயர்களையே யுரேனஸ் கிரக துணைகோள்களுக்கு வைத்திருக்கின்றனர். 

[ஒரு வேளை இந்தியர்களாகிய நாம் ஏதேனும் ஒரு கிரகத்தினை கண்டறிந்தால் அதற்கு “அப்துல் கலாம்” கிரகம் என பெயரிட எனக்கு ஆசை. ஏனெனில் என்னுடைய பெயர் இதில் பாதி]

உருளும் கிரகம் (Ref) Wiki

சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்கள் குறைவான சுழற்கோணத்தைக் கொண்டிருந்தாலும் இக்கிரகம் மட்டும் ஏறத்தாழ படுத்துக் கொண்டே சுழற்கிறது. 


அதனால் இதன் ஒரு பகுதி இரவாகவும் மற்றொரு பகுதி பகலாகவும் 42 வருடங்கள் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புண்டு. மற்ற கிரகங்கள் ஓரளவுக்கு செங்குத்து நிலையில் சுழல இக்கிரகம் மட்டும் படுத்துக் கொண்டே உருளும் காரணம் பற்றி ஆராய்ந்த வானியலாளர்கள் இக்கிரகம் முதலில் ஓரளவு செங்குத்தாக சுற்றியிருந்து பிறகு ஒரு மிகப்பெரும் விண்கல் மோதியதால் இது உருளும் நிலையில் சுழல ஆரம்பித்திருக்கலாம் என்று கருதுகின்றனர். (REFERENCE) WIKI PEDIA

Video

இந்த கிரகத்தினை இதுவரை பார்த்த  ஒரே விண்கலம் வாயேஜர் 2 எனும் செயற்கைகோல் மட்டுமே. .

இந்த Blog உங்களுக்கு பிடித்திருந்தால் Subscribe செய்யுங்கள்
மீண்டும் ஒரு வானியல் செய்திகளோடு சந்திப்போம்.
நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.