வியாழன் கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்

வியாழன் கிரகமானது நமது சூரிய குடும்பத்தின் ஒரு மிகப்பெரிய மற்றும் மிகப்பழமையான ஒரு கிரகம். இந்த கிரகமானது நமது சூரியன் உருவான நேரத்தில் தோன்றியிருக்கலாம் என ஒரு சில அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பொதுவான விடயம்

கிரகத்தின்  பெயர் : வியாழன் (Jupiter)

இடம்  : நமது சூரிய குடும்பத்தில் 5ஆவது கிரகம்

தூரம் : 484 மில்லியன் மைல் (778 மில்லியன் கி.மி) சூரியனிடமிருந்து

AU : 5.2 AU (Astronomical Units; 1 AU = 150 Million KM)

இந்த கிரகமானது மிகவும் பெரியது. எவ்வளவு பெரியது எனில். அதனும் 1300 பூமியை வைத்தாலும் அது தனக்குள் அடைத்து வைத்துக் கொள்ளும்.

ஆனால் இந்த கிரகமானது ஒரு காற்றுக்கிரகம் என அறிவியல் அறிஞர்களால் அறியப்படுகிறது. அதாவது. அந்த கிரகத்தில் உள்ள காற்று மேகங்கள் முழுவதுமாக அந்த கிரகத்தினை மூடியுள்ளது.

ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களை நாம் அந்த கிரகத்தில் கான முடியும்

https://youtu.be/1_7r3QOvF0Q?t=4m8s

 வளையங்கள்

இந்த  கிரத்தினை சுற்றி சனிக் கிரகத்தில் இருப்பது போல் வளையங்கள் உள்ளன. ஆனால் அவற்றின் அளவு சிறியதாக இருப்பதால் அவை பெரும்பாலான ஸ்பேஸ் டெலஸ்கோபிற்கு தெரிவதில்லை
இந்த செய்தியானது 1979ல் வாயேஜர் எனும் செயற்கைகோல் மூலம் நமக்கு தெரிய வந்தது. அதுமட்டுமல்ல.. மற்ற கிரகங்களான சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய மூன்றிற்கும் வளையங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாட்கள் மற்றும் நேரங்கள்

வியாழன் கிரகமானது ஒரு முறை தன்னைதானே சுற்றிவர (பகல் இரவு வர) பூமியின் கனக்குபடி 10 மணி நேரங்களையே அது எடுத்துக்கொள்ளும். 
ஆனால்
அது ஒரு முறை சூரியனை சுற்றிவர 4333 நாட்கள் பூமியின் கணக்குபடி எடுத்துக்கொள்ளும். அதாவது கிட்டத்தட்ட 12 வருடங்கள் எடுத்துக்கொள்ளும்

துனைகோள்கள்.

இதற்கு மொத்தம் 67 துனைகோள்கள் உள்ளன அதில் 50 (பெயரிடப்பட்ட)     உறுதிசெய்யப்பட்டது ,
17 இன்னும் உறுதி செய்யப்படவில்லை

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.