ஜூலை 15 ஆம் தேதி நடு இரவு பகுதி , கிட்ட தட்ட 130 கோடி மக்களில் ஒரு 20 கோடி மக்களாவது இது பற்றிய தெளிவான அறிவு கொண்டு. எப்படியாவது இந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சந்திரயான்2 வின்ணில் பாயும் நிகழ்வை நேரடியாகவோ அல்லது இனையத்திலோ பார்த்து விட வேண்டும் என்று ஆர்வத்துடன் காந்திருந்தனர்.

இரவு 2.51 மனிக்கு 1 மனிநேரம் முன்பு தான் . ராக்கெடில் சிறிய பிரச்சனை கண்டறியப்பட்டது. உடனே இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு , தள்ளி வைக்கப்பட்டது. இது பற்றிய செய்திகளை இஸ்ரோ தனது Twitter பக்கத்தில் உடனடியாக பதிவுசெய்தது.

பிறகு எப்போது திரும்பவும் இந்த விண்கலம் அதாவது GSLV MkIII ராக்கெட் சந்திரயான் விண்கலத்தினை சுமந்து வின்ணில் பாயும் என்று அனைவரும் காத்து இருந்தனர். அந்த நாள் தான் நாளை (22 ஜூலை 2019)

அதுவும் மதியம் 2.43 மணியளவில் இந்த லாஞ்ச் வைத்து இருக்கிறார்கள். ஒட்டு மொத்த இந்தியாவும் விழித்து இருக்கும் அந்த நேரத்தில். அனைவரின் கவனமும் இஸ்ரோவின் இந்த சந்திரயான் 2 விண்கலத்திலும், GSLVMkIII ராக்கெட்டிலும் தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,

நாளை மதியம் ராக்கெட் விண்ணில் ஏவ இன்று அதாவது 21 ஜூலை 2019 மாலை 6 மணியளவில் கவுண்டவுண் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கான டிவிட்டர் பதிவைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள்

Facebook Comments