நீங்கள் விண்வெளி பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விருப்பப்படுவீர்கள் என்றால் நாசாவின் ஆர்டிமிஸ் திட்டம் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். அப்படின்னா என்ன???
இதற்கு முன்
60 வருடங்களுக்கு முன் இது போல் ஒரு முறை நிலவுக்கு போனாங்களாம் ஆனால் இப்போ அதைவிட அதிக தொழில் நுட்பத்தில் அமெரிகா முன்னேரியுள்ளது ஆனால் திரும்பவும் ஏன் போகவில்லை என்று சிலர் கேள்வி எழுப்பினர் அதுக்காக . இப்போ அதாவது 2024 ல் “ஆர்டிமிஸ்” என்ற திட்டம் போட்டு
நாங்கள் நிலவுக்கு போறோம் , ஆனால் இந்த முறை அங்கிருந்து வர மாட்டோம் என்று கூறி ஆரம்பித்துள்ளனர்.
ஆர்டிமிஸ்
மேலே சொன்னதும் ஒரு காரனம் தான் ஆனால் அவர்கள் அப்படி சொல்லவில்லை “நிலவில் காலடி எடுத்து வைக்கும் அமெரிக்காவின் முதல் பெண் மணி மற்றும் இரண்டாவது ஆண். மேலும் நிலவில் ஒரு வருடகாலம் தங்கி அந்த சூழ்நிலைக்கு பழகிய பின் அவர்கள் அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்கு புறப்பட்டு செல்லுவார்கள் ” இந்த மிஷன் பெயர்தான் ஆர்டிமிஸ்
எனக்கு அதை பற்றி எந்த கருத்தும் இல்லை “அங்கு போய் நிம்மதியாக யாரையும் பிரச்சனைகு உட்படுத்தாமல் இருந்தால் சரி”

Lunar OutPost நிலவு விண்வெளி மையம்
இந்த ஆர்டிமிஸ் திட்டத்தினை நடத்தி முடிக்க அவர்கள் போட்ட திட்டம் தான். ஒரு லூனார் அவுட் போஸ்ட் செய்வது. அதாவது நமது பூமிக்கு எப்படி ஒரு பிரத்தேக மாக விண்வெளி ஆய்வு மையம் செயல் பட்டு வருகிறதோ அதே போல் ஒரு ஆராய்ச்சி மையம் , நிலவினை சுற்றி வரவேண்டும் என்பது தான் .
ஆனால் அவுட் போஸ்ட் என்றால் சற்று பெரியதாக இருக்க வேண்டும். அதாவது பிரம்மாண்டமாக இருக்க வேண்டும். உன்மையில் சொல்லப்போனால் அந்த கிரகத்திற்கு நேரடியாக யாரும் செல்ல மாட்டார்கள்.
செல்ல வேண்டும் என்றால், இந்த Outpost ல் இருந்து தயாரிப்புகள் செய்தபிறகுதான் அவர்கள் கிரகத்தில் இறங்க வேண்டும்.
கிரகத்தில் ஏதாவது ஒரு பொருள் கொடுக்க வேண்டும் என்றாலும் அதனை அவர்கள் Out post இல் இருந்து தான் செய்து கொண்டு செல்லவேண்டும்.
உங்களுக்கு புரிய வில்லை என்று நினைக்கிறேன்.
பொதுவாக இதனை ஆபத்து கால உறைவிடம் என்று வைத்து கொள்ளுங்கள்.

பல நாடுகள்
இந்த அளவு பெரிய, அது மட்டும் இன்றி எல்லா வசதியும் கொண்ட ஒரு விண்வெளி மையத்தினை கட்டுவது ஒரு நாட்டால் முடியாது என்று நாசாவுக்கு தெரியும்.
அதனால் தான் இதில் பல நாடுகள் பங்கு சேர்த்து இருக்கிறது.
- நாசா – அமெரிக்கா
- ESA – ஐரோப்பா விண்வெளி மையம்
- JAXA – ஜப்பானிய நிறுவனம்
- ROSCOSMOS – ரஷ்யா விண்வெளி மையம்
- CSA-ASC – கனடா விண்வெளி நிறுவனம்
என்று 5 நாடுகளை சார்ந்த பல விண்வெளி நிறுவனங்கள் இதில் பங்கு பெருகின்றன.
CLPS – Commercial Lunar Payload system
இந்த லூனார் அவுட்போஸ்ட் வைக்க வேண்டும் என்றால் இப்போது பல அத்தியாவசிய ஆராச்சிகளை நிலவில் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அதற்காக நாசா ஏற்கனவே 2018 ஆம் ஆண்டில் 9 வின்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை கூட்டு சேர்த்து இருந்தது.
அதில் அடுத்த கட்டமாக 2019 இல் ஒரு 5 நாட்களுக்கு முன், திரும்பவும் 5 அமெரிகா வின்வெளி அமைப்புகளை தேர்ந்தெடுத்து உள்ளது அவையாவன.
- Blue Origin—- Blur Lander Project
- Ceres Robotic——??
- Space X———- Star Ship Project
- Sierra Nevada Corp—-??
- Tyvak nano sat System—??
Video
மேலும் தகவல்கள் தெரிஞ்சிச்சினா சொல்றேன். நீங்களும் இந்த இனையதளத்தில் ஒரு கண்ணு வச்சிகோங்க.
- விக்ரம் லேண்டர் விழுந்த இடம் “Vikram lander found” nasa said
- இன்சைட் லேண்டரின் 1 ஆவது ஆண்டுவிழா
- Dogon Tribe and Sirius Star Mystery | பழங்குடியினரின் வியக்க வைக்கும் விண்வெளி அறிவு – தந்திசெய்தி
Hi i am abdul, living in Chennai Pallavarm, working on SNT Project, i am the CEO and Founder of Spacenewstamil.com, Visit my Twitter and Face book if u wish. thank you.