நாசாவின் ஒசைரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலமானது வருகின்ற திங்கள்கிழமை முதல் பெண்ணு வை வட்டமடிக்க ஆரம்பிக்கும் என நாசா தரப்பில் கூறியுள்ளது. 2016 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்த ஒசைரிஸ் ரெக்ஸ் எனும் விண்கலமானது பூமிக்கு மிக அருகில் உள்ள பென்னு என்று பெயரிடப்பட்ட விண்கல்லை ஆராய்ச்சி செய்து, அதிலிருந்து மாதிரிகளை எடுத்து வருவதற்காக அனுப்பப்பட்டது தான்.

இந்த விண்கலமானது வருகின்ற திங்கட்கிழமை அதாவது டிசம்பர் 3-ம் தேதி சரியாக இந்த விண்கல்லை வட்டமடிக்கும் படி அதன் ஆர்பிட் இல் இணைக்கப்படும் என்று நாசா கூறியுள்ளது அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்வினை நாசாவின் தலைமை இடத்தில் இருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப் படுவதாகவும் கூறியுள்ளது இதனை நாசா TV தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

500 மீட்டர் நீளம் கொண்ட, முக்கோண வடிவிலான இந்த விண்கல்லை ஒசைரிஸ் ரெக்ஸ் விண்கலமானது சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வட்டமடிக்க ஆரம்பிக்கும் டிசம்பர் 31ம் தேதி முதல் சுமார் 18 மாதங்கள் இந்த விண்கலமானது அந்த ஆராய்ச்சி செய்யும் பிறகு 2020ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இந்த ஒசைரிஸ் ரெக்ஸ் ஆனது விண் கல்லில் மேற்புறத்தில் தரையிறங்கும் பிறகு அதிலிருந்து சேகரிக்க முடிந்த அளவு மாதிரிகளை சேகரித்து 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த வின்கல்லை விட்டு புறப்படும்.

சேகரிக்கப்பட்ட மாதிரிகள் 2023 செப்டம்பர் மாதம் பூமியை வந்து அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SourceDownload Our App

More Posts to Read on:-Facebook Comments