படிச்சவுடனே தலை சுற்றுகிறதா!!!.

அதெல்லாம் வேண்டாம். விஷயம் என்னவென்றால். நாசா அமைபானது வரும் ஆகஸ்டு மாதம் சூரியனுக்கு ஒரு ஆய்வுக்கலனை அனுப்ப இருக்கிறது. அந்த ஆய்வுக்கலனானது இதுவரை இல்லாத அளவுக்கு . சூரியன தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக ஒரு ஸ்பெஷலான சூரிய வெப்பம் தாங்கும் பாதுகாப்பு தடுப்பு (Shield) ஒன்றை உருவாக்கி அந்த கலனில் பெருத்தியுள்ளது.

கார்பன் மற்றும் கார்பன் ஃபாம் கேர் (carbon foam core) எனும் தட்டுக்களால். இது ஒருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஒன்றன் மீது ஒன்று வைத்து மிகப்பெரும் தடிமன் கொண்டதாக இது உருவாகியுள்ளது. இந்த தடுப்பானது கடந்த மாதம் 27 ஆம் தேதி அதாவது ஜீன் 27 2018 அன்று அந்த ஆய்வுக்கலனில் பொருத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது அந்த தட்டுகளின் மேல் ஒரு சிறப்பு வாய்ந்த வெள்ளைநிற பூச்சு ஒன்று பூசப்பட உள்ளது. சூரிய ஒளியை தெரிக்கச்செய்யும்(reflect) தனித்தன்மை வாய்ந்த இந்த நிறத்தின் உதவியால் அதிக அளவு சூரியனின் வெப்ப ஆற்றல் பிரதிபலித்து நீக்கும். அதன் பலனாக. கலனில் உள்ள கருவிகளை சேதமடைவது குறையும் என ஆராய்சி யாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த சிறப்பான Cutting Edge Technology யால் ஏறத்தாழ 2500 டிகிர ஃபாரன் ஹீட் வரையில் அந்த ஆய்வுக்கலனால் தாங்கமுடியும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் அதாவது.  கிட்டத்தட்ட 1370 டிகிரி செல்சியஸ் வெப்பம். அம்மாடியோ!!!!!!!

இதுவரை மனித வரலாற்றில் இல்லாத அளவு.4 மில்லியன் மைல் சூரியனுக்கு மிகவும் அருகாமையில் இது செல்லும். உங்களுக்கு புரிவதற்காக ஒரு உதாரனம். உண்மையில் புதன் கிரகம். மிகவும் பக்கத்தில் இந்த கிரகம் தான் உள்ளது. இதன் அருகாமை தூரம் என்ன தெரியுமா? 29 மில்லியன் மைல்.

வாய ரொம்ப பொளக்காதீங்க. இந்தியாவும் சூரியனுக்கு ஆய்வுக்கலனை செலுத்த எதிர்கால திட்டம் தீட்டியுள்ளது.

Facebook Comments