Parker Solar Probe is in Launch Pad | கிளம்ப தயாராகிறது பார்க்கர் சூரியனுக்கான விண்கலம்.

ஆகஸ்டு 1 ஆம் தேதி தன்னுடைய தரை வழி பயணத்தை முடித்த இந்த விண்கலம் ஆகஸ்டு 1ஆம் தேதி அதிகாலையில், அதற்கு தேவையான அனைத்து எறி பொருளையும் நிரப்பிக்கொண்டு, ட்டுஸ் வில்லே , புளோரிடா விலிருந்து “கேப் கனெவேறாள் ” விண்வெளி தளத்திற்கு வந்து சேர்ந்தது.

(Titusville, Florida, late Monday for an overnight journey to the Complex 37B launch pad at nearby Cape Canaveral Air Force Station.)

இதன் பாதுகாப்பு முறைகளை பற்றி ஏற்கனவே ஒரு பதிவிட்டு இருக்கிறேன். அதைக்கான இங்கே சொடுக்கவும்

ஆகஸ்டு 11 ஆம் தேதி இது விண்ணில் ஏவ உள்ளது அதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு ஒரு ஸ்பெஷலான கவுண்டவுன் ஆரம்பிக்க உள்ளது. இந்த விண்கலத்தின் மற்றுமொரு பாதுகாப்பு அமைப்பாக . உள்ளே உள்ள இயந்திரங்கள் வெப்பத்தால் பாதிப்பு அடையாமல் இருக்க அமைப்பு முழுவதிலும் குளிரூட்ட பட்ட தண்ணீர் ஓட்டத்தில் இருக்கும் வண்ணம் ஒரு புது யுக்தியும் இதில் பயன் படுத்தப்படுகிறது.

இந்த விண்கலம் விண்ணில் செலுத்தபட்டு அதன் முதல் இலக்காக வெள்ளிக்கிரகத்தினை வைத்துள்ளனர். அக்டோபர் 2 ஆம் தேதி இது வெள்ளி கிரகத்தினை அடையும் என்றும். வெள்ளி கிரகத்தில் கிடைக்கும் ஈர்ப்பு விசையினை இது முக்கியமான காரணமாக பயன்படுத்தி சூரியனுக்கான அடுத்த படியை எடுக்கும். கணிப்புகள் படி நவம்பர் 5 ஆம் தேதி சூரியனின் மிகவும் அருகாமையில் இது அதாவது 24 மில்லியன் கி.மி. என்ற தொலைவை அடையும். அதன் அடுத்த கட்ட சுற்று வட்ட முறைகளில் fly by பார்க்கர் விண்கலமானது தனது மிகவும் அருகாமை தொலைவான 3.9 மில்லியன் கிமி. எனும் தொலைவை அடையும். என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு சில செய்திகள்

  • இதன் எடை : 646 கிலோ
  • யூஜினி பார்க்கர் எனும் அறிவியலாளர். பெயரைக்கொண்டு இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இவர்தான் 1958 ஆம் ஆண்டு முதல்முதலில் சூரியனில் சூரிய காற்று Solar Wind இருப்பதை கணித்தவர்
  • இது சூரியனுக்கான இரண்டாவது விண்கலம். ஏற்கனவே 1970 ஆம் ஆண்டு அமெரிக்க மற்றும் ஜெர்மனி சேர்ந்து “ஹீலியோஸ்” எனும் சூரியனுக்கான விண்கலனை அனுப்பியுள்ளது. அதன் அதிக பட்ச தூரம் சூரியனுக்கும் அதுக்கும் 27 மில்லியன் கி.மி
  • இது டெல்டா 4 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவ உள்ளது.

Facebook Comments

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: