சனி கிரகத்தின் ஒளிரும் வளையங்கள்

சனி கிரகத்திற்கும் பூமிக்கும் இடையே மிகவும் குறுகிய தூரம் இருக்கும் போது (சுமார் 845 மில்லியன் மைல்கள்) கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி 2019 ஆம் வருடம் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இந்த புகைப்படம்.

இந்தப் புகைப்படம் Hubble விண்வெளி தொலைநோக்கி எடுத்த சனிக்கிரகத்தின் இரண்டாவது புகைப்படம் ஆகும் அதுவும் இந்த ஆண்டிலேயே.

இது மாதிரியான புகைப்படங்களை வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ நாம் எடுத்து சேமித்து வைத்துக்கொண்டே வருவோம், இது எதற்காக என்றால் OPAL என்ற ஒரு திட்டத்திற்காக அதாவது outer planet atmospheric legacy என்பதின் சுருக்கம்தான் OPAL.

இது போன்ற புகைப்படங்கள் சனிக்கிரகத்தின் மட்டுமில்லை மற்ற நான்கு வாயு கிரகங்களையும் புகைப்படம் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து நாம் அந்த கிரகங்களில் வளிமண்டலத்தில் என்னென்ன மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பதை கண்காணிக்க முடியும்

Ref NASA

Facebook Comments