ஈவன்ட் ஹரைசோன் தொலைநோக்கி என்றால் என்ன? What is Event Horizon Telescope?

இந்த கேள்வி அவ்ளோ ஈசியா சொல்லிட முடியாது. ஏனென்றால் இது ஒரு தொலைநோக்கி கிடையாது, மாறாக இது ஒரு புதிய சிந்தனை. அல்லது யோசனை, Its a new Ideology..

நீங்கள் எல்லாரும் ஈவன்ட் ஹரைசோன் தொலைநோக்கி என்ற உடன் இது ஏதோ ஒரு புதிய தொலைநோக்கிபோல என்று நினைச்சிட்டீங்களா? இது 8 பெரிய தொலைநோக்கிகளின் இனைப்பு . அல்லது உழைப்பு என்று கூறலாம்.

அதாவது பூமியில் உள்ள 8 வேறு வேறு இடங்களை தேற்வு செய்து. அந்த 8 தொலைநோக்கிகளின் மூலம் கிடைத்த தரவுகளை , மேம்படுத்தி புதிய கருந்துளையின் புகைப்படத்தை எடுப்பது தான் இந்த ஈவன்ட் ஹரைசோன் தொலைநோக்கியின் முக்கிய பனி. எப்படி எடுக்க முடியும் என்ற கேள்விக்கு . கீழே உள்ள படத்தில் பதில் உள்ளது. அதாவது நாம் எவ்வளவு சிறிய பொருளினை பார்க்க விளைகிறோமோ. அதற்கு ஏற்றார்ப்போல் நமது தொலைநோக்கி பெரிதாக இருக்க வேண்டும். அது தான் காரனம் இவ்வளவு , அப்படி பார்க்கும் போது நமது கருந்துளையானது “SGR A*” மிகவும் தொலைவில் உள்ள ஒரு பொருள், இதனை பார்க்க பூமி அளவுக்கு கண்ணாடிகளை கொண்ட ஒரு மிகப்பெரிய தொலைநோக்கி தேவை. ஆனால் அது சாத்தியம் இல்லை என உங்களுக்கே தெரியும்.  இதனால் தான் இந்த இவன்ட் ஹரைசோன் தொலைநோக்கி திட்டம்  . உலகில் 8 இடங்களை தேர்வு செய்து. அந்த தொலைநோக்கிகளை நமது கருந்துளையை பார்க்கும் படி வைத்து. அதன் மூலம் கிடைக்கும் தரவுகலை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு கருந்துளையின் படத்தினை உருவாக்கு வது தான்.

கருந்துளை பற்றி நான் இன்னும் சொல்லவில்லை.  அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

ஈவன்ட் ஹரைசோன் தொலைநோக்கியானது கருந்துளையினை

புகைப்படம் எடுப்பதற்காக அமைக்கப்பட்டது தான். ஆச்சரியமாக உள்ளதா? பிளாக் ஹோல் அல்லது கருந்துளை. நமது பால்வழி அண்டத்தில் உள்ள கருந்துளையின் பெயர் “சஜிடாரியஸ் A*” SGR A*  என வைத்துள்ளனர். இது தான் நமது கேலக்ஸியின் கருந்துளை. இந்த கருந்துளையானது பல ஆண்டுகளாக நமது விண்வெளி ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்திலும். புதிரிலும்  ஆழ்த்திவந்தது. அதற்காக ஒரு பதிலாக தான். நாம் நமது அண்டத்தில் உள்ள கருந்துளையை ஒரு தெளிவான படம் எடுத்து பார்த்தோமேயானால். இதனை பற்றிய பல செய்திகளை நாம் தெரிந்து கொள்ளலாம் என யோசித்து ஆரம்பித்தது தான் இந்த ஈவன்ட் ஹரைசோன் திட்டம். Black Hole பற்றி தெரிந்து கொள்ள ஒரு புதிய ஆய்வு கட்டுரை விரைவில் வர உள்ளது. சப்ஸ்கிரைப் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த ஈவன்ட் ஹரைசோன் தொலைநோக்கியானது கடந்த 2016 ஆம் ஆண்டு வெளி உலகுக்கு Katie Bouman என்ற ஒருவரின் TED Show மூலமாக தெரிய வந்தது. இதனை 2017 ஆண்டு ஆரம்பிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தனர்.

2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திட்டமானது. முடிவு பெற்றது 2017 கடைசியில் தான். அதன் பிறகு தாங்களுக்கு கிடைக்கப்பெற்ற தரவுகளை தனது நிறுவனமான MIT இல் உள்ள கனினிகளின் உதவியோடு ஒன்று திரட்டி ஒரு கருந்துளையின் புகைப்படத்தினை தரப்போவதாகவும் கூறினர். ஆனால் நாட்கள் கழிந்தன. கருந்துளை படம் வந்தபாடில்லை. இதற்கு காரனமாக தரவுகளில் ஒன்றான. அண்டர்டிக் பகுதியில் உள்ள தொலைநோக்கியின் வன் தகடுகள் வரவில்லை என கூறப்பட்டது,  இதற்கு பல நாட்கள் பிடித்தன. கடும் பனி மற்றும் விமான போக்குவரத்து தடை காரணமாக…. கடைசியாக 2018 பிப்பிரவரி மாதத்தில் வெளியிடப்போவதாக் அறிவிப்பு செய்யப்பட்டது. பிறகு அதுவும் கைவிடப்பட்டது.
இப்போது , இறுதியாக 10 மாதங்களுக்கு பிறகு திரும்பவும் தங்களின்  மாற்றியமைக்கப்பட்ட , Imaging Algorithm  மூலமாக ஒரு புதிய கண்ணோட்டத்தில் கருந்துளையின் படத்தினை வெளியிடப்போவதாக . கடந்த மாதம் அதாவது செப்டம்பர் 27 ஆம் தேதி EHT இன் ஈவன்ட் ஹரைசோன் தொலைநோக்கியின் இனையதளத்தில்  கூறப்பட்டது. இந்த செய்தி விண்வெளி ஆர்வளர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ..
ஏன் மகிழ்சியாக இருக்கிறார்கள் என்றால். இந்த கருந்துளையை பற்றிய செய்திகளை அதிகமாக தெரிந்துகொள்ளலாம் என்ற ஆர்வத்தில் தான்..  ஏனெனில் கருந்துளை நாம் இதுவரை பார்த்திடாத ஒன்று. அப்படி ஒருவேளை கருந்துளை பற்றிய செய்தி வெளி உலகுக்கு தெரியவந்தால் நான் அதை எனது இனைய தளத்தில் கண்டிப்பாக உங்களுக்கு சொல்லுவேண். . உங்களுக்கு இந்த ஆர்ட்டிகள் புரியவில்லை எனில் நான் எனது போட்காஸ்ட் எபிசோட் போடும் வரை காத்திருங்கள்.
PodCast:
Soon
Source: EHT
Source: EHT
Facebook Comments