ஒரு சில வானியல் பொருட்களுக்கு மிகவும் பிரியமான அல்லது, வேடிக்கையான பெயர்கள் இருக்கும், அந்த பெயர்களாவன ஒரு வேளை புராணங்களை அடிப்பாடியாக்க கொண்டோ அல்லது அவற்றின் சொந்த உருவ அமைப்பினையோ அடிப்படையாக கொண்டிருக்கும்.. உதாரணமாக “The Orion” (THE HUNTER) Constellation, ஓரியன் விண்மீன்  தொகுப்பானது.  கிரேக்க புரானத்தின் படி பெயரிடப்பட்டுள்ளது. அல்லது சம்ப்ரீபோ கேலக்ஸி, அல்லது குதிரை தலை நெபுலா (Horsehead Nebula), அல்லது நம் பால்வழி அண்டத்தினை கூட எடுத்துக்கொள்ளலாம்.

எனினும் பெரும்பான்மையான அண்டவியல் பொருட்களாவன வாணியல் பட்டியலில் (Astronomical Catologs) அடங்கியிருக்கும்.  அப்படி இருக்கும் பட்டியலில் அவற்றிற்கு அதன் கண்டுபிடிப்பின் அடிப்படையிலேயே பெயர்கள் வழங்கப்படும்.

நீங்கள் பார்க்கும் இந்த படத்தில் இரண்டு அண்டவெளிகள் தெளிவாக தெரியும் படி ஹுப்பிள் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது.  அதில் மிகவும் பெரியதாக உள்ள ஒரு அண்டம் தான் என்.ஜி.சி 4424 (NGC 4424) NGC என்றால் New General Catologs of Nebulae and Clusters of Stars என்று அர்த்தம்.
இந்த என்.ஜி.சி முறையானது 1888 ஆம் ஆண்டுகளிலே தொகுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 7840 பொருட்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

அதற்க்கு கீழ் இருக்கும்.. ஒரு சிறிய பகுதிதான் லீடா 213994 (LEDA 213994) இதன் அர்த்தம் [The Lyon-Meudon Exttrragalactic Daatabase] இது ஒரு பட்டியல் முறை இதில் லட்சத்திற்கும் மேற்பட்ட விண்வெளி பொருட்கள்  பட்டியல் படுத்தப்பட்டுள்ளன.

Facebook Comments