பெர்னார்டு 68 க்கு அப்பரம் இது கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு

பெயர் மிகவும் வித்தியாசமாக உள்ளதா? ஆமாம் எனக்கும் இது வித்தியாசமானதாக தான் உள்ளது. என் ஜி சி 2261 என பெயரிடப்பட்ட இந்த நெபுலாவானது முதன் முதலில் எட்விட் ஹப்புள் என்பவரால். சுமார் 200 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாறும் நெபுலாவானது, அதை கண்டுபிடித்தவர் பெயரையே கொண்டு அழைக்கப்படுகிறது. (Hubble’s Variable Nebula) அது மட்டுமல்லாது . NGC வரிசையினில் வகைப்படுத்தவும் பட்டது. அதாவது 2261 வது விண்வெளி உறுப்பினராக அது பதிவு செய்யப்பட்டது.

சரி இப்போது நாம் நெபுலாவை பற்றி பார்ப்போம். இந்த நெபுலாவானது பெயருக்கு ஏற்றார் போல் தனது வடிவத்தினை மாற்றியுள்ளது அதுவும் விண்வெளியில் பல தொலைநோக்கிகள் பார்த்து கொண்டு இருக்கும் இந்த நேரத்திற்குள்.  இரண்டு வாரத்திற்குள். இது தன் வடிவத்தினை மாற்றியுள்ளது.. நீங்கள் பார்க்கும் இந்த மாறும் நெபுலாவின் புகைப்படமானது ஹப்புள் தொலைநோக்கி வாயிலாக எடுக்கப்பட்ட புகைப்படம்.

Hubble’s variable Nebula

இந்த நெபுலாவா யூனிகார்ன் (Unicorn) என்று அழைக்கப்பட கூடிய மேனோ சிரோடிஸ் (Monocerotis Constellation )  எனும் விண்மீன் தொகுப்பில் உள்ளது. 

இந்த நெபுலா இப்படி மாறுவதற்கு காரணம் இது ஒரு பிரதிபலிக்கும் நெபுலாவாக இருப்பதால் தான். ஆமாம் இது தனக்கு அருகில் இருக்கும். R மோனோ சிரோடிஸ் எனும் சூரியனிடமிருந்து வரும் தூசிகளையும் வாயுக்களையும் கொண்டுதான் இது தன் வடிவத்தினை மாற்றிவருகிறது.

இதுபோல் பல பிரதிபளிக்கும் நெபுலாக்கள் உள்ளன. இந்த குறிப்பிட்ட NGC 2261 நெபுலாவானது. நம்முடைய சூரியனிலிருந்து கிட்டத்தட்ட சுமார் 2500 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. மேலும் இந்த மாறும் நெபுலாவானது 1 ஒளியாண்டு தொலைவு அளவுக்கு பெரியதாக இருக்கும் என கண்க்கிடப்பட்டுள்ளது.

Facebook Comments