இது போன்று ஒன்றை நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறோம்  அல்லவா? ஆம் அதே தான். 2017ல் இந்தியா அனுப்பிய ரக்கெட்டில் 104 செயற்க்கைகோல்கள் வின்ணில் ஏவப்பட்டது.  இப்போது ஸ்பெஸ் எக்ஸ் முயற்சி செய்து பார்க்கிறது. இதற்கு பெயர் SSO-A.  ஸ்மால் சாட்டிலைட் எக்ஸ்பிரஸ் Small Satellite Express.என வைத்திருக்கிறார்கள், இந்த முறை ஸ்பெஸ் எக்ஸ் தனது ஃபால்கல் 9 ராகெட் உதவியுடன் 70 செயற்க்கைகோல்களை வின்ணில் ஏவ தயாராகி வருகிறது. US-Based அதாவது அமெரிக்க நாடுகளில் எதுவும் இதுவரை இவ்வளவு செயர்க்கைகோள்களை ஏந்தி சென்று வின்னில் செலுத்தியதில்லை. இது தான் அவர்களுக்கு முதல் முறை. அனைவரும் மிகுந்த ஆச்சரியத்துடனும். எதிர்ப்பார்ப்புடனும் இருக்கிறார்கள்.

இந்த SSO-A மிஷனில் கிட்ட தட்ட 35 நாடுகளின் உள்ள வித்தியாசமாக பல நிறுவனங்களின் செயற்கைகோள்கள் விண்ணில் ஏவ உள்ளன. அவற்றில் கல்வி சார்ந்த செயற்கைகோள்கள், தொழில் சார்ந்த (Commercial) மற்றும் அரசு நிறுவனங்களின் செயறக்கைகோள்களும் இடம் பெற்றுள்ளது. .அவற்றில், ஜார்ஜியா தொழில் நுட்ப கழகத்தின் செயற்க்கைகோளும், ஹனிவெல் ஏரோ ஸ்பேஸ் நிறுவனம், மற்றும் கொரியாவின் அறிவியல் தொழில்நுட்ப கழக செயர்கைகோள்கள் என பல தரப்பட்ட சிறியவகை செய்யற்க்கைகோள்கள். இடம் பெற்றுள்ளன.

Facebook Comments